Google Visitor Experience
வெளிப்புறக் கலைப்
படைப்புகள்
ஆர்வம், தொடுதல், விளையாடுதல் ஆகியவை மூலம் வெளிப்புற பிளாசா கலைப்படைப்புகளைப் பார்த்து மகிழ உங்களை அழைக்கிறோம். உள்ளூர் மவுண்ட்டன் வியூ சமூகத்துடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 இன்டராக்டிவ் மற்றும் இமேஜினேட்டிவ் கலைப்படைப்புகளின் தொகுப்பான Burning Man Project மூலம் ஒருங்கிணைக்கப்பட்டது. கலைப்படைப்புகளுக்கான கருப்பொருட்களுக்கு உத்வேகமூட்டிய தொடர் கூடுகைகளின் வழியே, சமூகத்தின் சிறுவயது சாகசம் மற்றும் ஆர்வம் தொடர்பான கதைகளைக் கேட்டறிந்தோம், வெவ்வேறு நிலப்பகுதிகளின் வழியே தமக்கான பாதைகளை அவர்கள் எப்படிக் கண்டறிந்தார்கள் என்பதைத் தெரிந்துகொண்டோம், விளையாட்டுத்தனமாக உணரச் செய்யும் அனுபவங்களை மேற்கொள்ள எது அவர்களுக்கு உந்துதல் அளித்தது என்பதையும் கேட்டறிந்தோம். இந்தப் புதிய வெளிப்புறக் கலைவெளி இன்டராக்டிவ் மற்றும் டைனமிக் கலை மூலம் பொதுவான பிணைப்புகளை மேம்படுத்துவதுடன் மனிதத் தொடர்புகளையும் உருவாக்க முடியும் என்று நம்புகிறோம்.
உட்புறக் கலைத்
தொகுப்பு
Googleளின் ஆர்டிஸ்ட் இன் ரெசிடென்ஸ் (Artist in Residence) திட்டம் கலைஞர்களை நாம் வாழும் மற்றும் பணிபுரியும் சமூகங்களில் இருந்து படைப்பாற்றலுக்கான உந்துதலைப் பெறும் இன்றியமையாத முன்னோடிகளாக அங்கீகரிக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள Google ஸ்பேஸ்களில் அசல் கலைப்படைப்புகளை உருவாக்க கலைஞர்களை நாங்கள் நியமிக்கிறோம், மேலும் Google Visitor Experience போன்ற இடங்களில் திட்டத்தின் இலக்குகளான சமூகத்தை உருவாக்குதல், படைப்பாற்றலை ஊக்குவித்தல், புதுமைகளை வளர்த்தல் ஆகியவற்றை அவர்களின் கலைப்படைப்பு மேம்படுத்துகிறது. Google Visitor Experienceஸில் Cafe, Huddle, Google Store ஆகியவற்றில் ஆர்டிஸ்ட் இன் ரெசிடன்ஸ் (Artist in Residence) கலைப்படைப்பைப் பார்க்கலாம். கெல்லி ஆர்டிங், ஜான் பேட்ரிக் தாமஸ், மிகல் அர்சாபே, ஏஞ்சலிகா ட்ரிம்பிள்-யானு ஆகிய கலைஞர்களின் படைப்புகளை அங்கே பார்க்கலாம். இவர்கள் அனைவரும் விரிகுடா பகுதியைச் சேர்ந்தவர்கள்.