அழிவிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள்

ஒரு நல்ல சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக பொருட்களின் மறுபயன்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கிறோம்.

5 நிமிடங்கள்

படம்: மார்க் விக்கென்ஸ்.

Mr & Mrs Ferguson Art உருவாக்கிய கியூரியஸ் தி பியர் கலைப்படைப்பு ஒரு மாபெரும் கிரிஸ்லி கரடியின் சிற்பமாகும். இதன் ரோமம் 1,60,000க்கும் அதிகமான நாணயங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. படம்: மார்க் விக்கென்ஸ்.

நாம் தினந்தோறும் எடுக்கும் சிறிய முடிவுகள்தான் தூய்மையான, ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தின் தொடக்கமாகும். அதற்காகத்தான், நல்ல சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ஆற்றல், நீர் மற்றும் பிற இயற்கை வளங்களை இன்னும் பொறுப்புடன் பயன்படுத்துவதற்கும் நாங்கள் தொடர்ந்து வழிகளைத் தேடுகிறோம். இதன் காரணமாகத்தான், Gradient Canopyயில் வட்ட வடிவம் எனும் கோட்பாட்டைக் கருத்தில் கொண்டு கட்டடத்தை உருவாக்க நாங்கள் முடிவு செய்தோம். இது தீர்ந்துபோகக்கூடிய இயற்கை வளங்களுக்கான தேவையைக் குறைக்க உதவும். வட்ட வடிவமைப்பின் நோக்கம் முடிந்தவரை பொருட்களை நீண்டகாலம் பயன்படுத்துவதாகும். அதனால்தான் மீட்டெடுக்கப்பட்ட மற்றும் மறுபயன்பாடு செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி கட்டடத்தை உருவாக்குகிறோம்.

Gradient Canopyயில், கட்டடம் முழுவதும் 30க்கும் அதிகமான மீட்டெடுக்கப்பட்ட பொருட்களை நிறுவியுள்ளோம். மீட்டெடுக்கப்பட்ட மரக்கட்டை, சைக்கிள் ஸ்டாண்டு, லாக்கர்கள், கம்பளம், ஓடுகள் போன்றவை இதிலடங்கும். பயன்படுத்தப்படவில்லை எனில் இவை குப்பைக் கிடங்கிற்குச் சென்றிருக்கும். மீட்டெடுக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி கட்டடத்தை உருவாக்கியதால் இன்டர்நேஷனல் லிவ்விங் ஃபியூச்சர் இன்ஸ்டிட்யூட் (ILFI) லிவ்விங் பில்டிங் சேலஞ்ச் (LBC) மெட்டீரியல்ஸ் பெடல் சான்றளிப்பில் நாங்கள் பங்கேற்க முடிந்தது. இதன்மூலம் நச்சுத்தன்மையற்ற, சூழலுக்கேற்ப மறுசீரமைக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவது எங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது.

கட்டடத்தின் அளவு காரணமாக, மீட்டெடுக்கப்பட்ட பொருட்களைத் தேவையான அளவில் பெறுவதற்கு நாங்கள் பல உத்திகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. உதாரணமாக, வடிவமைப்பிற்கு அதிகம் தேவைப்பட்டன என்பதால் மீட்டெடுக்கப்பட்ட டைல்கள், கம்பளம் போன்ற பொருட்களைப் பெறுவது சவாலாக இருந்தது. மேலும் அவை பரிமாணங்கள், நிறம், பொருள் அடிப்படையில் சீரானதாக இருக்க வேண்டியிருந்தது.

Googleளில் உள்ள எங்கள் சொந்தச் சேமிப்புக் கிடங்கில் இருந்து பொருட்களை எடுத்து மீண்டும் பயன்படுத்துவதை ஒரு முக்கிய உத்தியாகக் கையாண்டோம். அதாவது, முந்தைய திட்டங்களில் பயன்படுத்தாத மீதமுள்ள புதிய பொருட்கள் மற்றும் கட்டடத்தை இடிப்பதற்கு முன்பு அகற்றப்பட்ட பொருட்கள் உட்பட எங்கள் சொந்த உபரிப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளோம். எங்களிடம் ஏற்கெனவே இருந்ததைக் கணக்கிட்டதில் மீட்டெடுக்கப்பட்ட கம்பள டைல்கள், சைக்கிள் ஸ்டாண்டு, பீங்கான் டைல்கள், ஒலிக்கட்டுப்பாட்டுக் கூரை டைல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த முடிந்தது.

மற்றொரு வழியில், மீட்டெடுக்கப்பட்ட பொருட்களான உள்ளூரிலிருந்து பெற்ற பல மரக்கட்டைகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். உதாரணமாக, கட்டுமானத்தின்போது அகற்றப்பட்ட மரத்தைப் பயன்படுத்தி கட்டடம் முழுவதும் வைப்பதற்கு பெஞ்ச்சுகளை வடிவமைத்துள்ளோம். சைக்கிள் நிறுத்தும் பகுதிகளில் சுவர் பேனலிங் செய்தல், Google Storeரின் தரையை அமைத்தல் போன்றவற்றைச் செய்வதற்குப் பயன்படும் பாதுகாக்கப்பட்ட மரக்கட்டையை எங்களுக்கு வழங்கக்கூடிய உள்ளூர் விற்பனையாளர்களையும் நாங்கள் தேடினோம்.

படம்: மார்க் விக்கென்ஸ்

Google Storeரின் தரை அழிவிலிருந்து மீட்கப்பட்ட மரங்களால் உருவாக்கப்பட்டது. படம்: மார்க் விக்கென்ஸ்.

Gradient Canopyயில் எங்கள் வட்ட வடிவக் கொள்கையின் மற்றொரு நோக்கம் என்னவென்றால், முடிந்தவரை குப்பைக் கிடங்கிற்குப் பொருட்களை அனுப்புவதைத் தவிர்ப்பதற்காக, லட்சியக் கட்டுமானக் கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துவதாகும். ஆகஸ்ட் 2023 நிலவரப்படி, 90%க்கும் அதிகமான கட்டுமானக் கழிவுகள் குப்பைக் கிடங்குகளுக்குச் செல்லாமல் தடுத்துள்ளோம். மேலும் 2020 முதல் 2022 வரை குளோஸ்டு-லூப் வால்போர்டு திட்டத்தின் மூலம் 5,50,000 பவுண்டுகளுக்கு மேல் ஜிப்சம் கழிவுகளை மறுசுழற்சி செய்துள்ளோம்.

விரிகுடா பகுதியில் கட்டடத் தயாரிப்புகள் மற்றும் பிற பொருட்களுக்கான ஆன்லைன் பரிமாற்றத்தை உருவாக்கிய காலநிலைத் தொழில்நுட்ப நிறுவனமான Rheaply உடனும் நாங்கள் பணியாற்றினோம். பே ஏரியா ரீயூஸ் மார்க்கெட்பிளேஸ் மூலம் ஃபர்னிச்சர், சாதனங்கள், உபகரணம், பிற கட்டடப் பொருட்கள் போன்ற உபரி மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்களை அந்தப் பகுதியில் உள்ள பிசினஸ்கள் குறைந்த விலையில் பெறலாம். Gradient Canopyக்கு நாங்கள் கூடுதலாகப் பர்ச்சேஸ் செய்த பொருட்களை Rheaply நெட்வொர்க்கிற்கு அளிப்பதோடு மட்டுமல்லாமல், Googleளில் உள் பொருட்களின் மறுபயன்பாட்டிற்காக எங்கள் செயல்முறையை மதிப்பிடுவதற்கும் Rheaply நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகிறோம். தனிப்பட்ட திட்டக் குழுக்கள் பொருட்களைக் கண்டறிவது, டைம்லைனை ஒருங்கிணைப்பது போன்ற சிக்கலான செயல்முறைக்குப் பதிலாக, மறுபயன்பாட்டிற்கான எங்கள் அணுகுமுறையை விரைவுபடுத்துவதற்கும் நடைமுறையை வழக்கமாக்கவும் புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகிறோம்.