வியப்பூட்டும் தருணங்களையும் மகிழ்ச்சியான தருணங்களையும் வழங்குகின்ற செயல்திறன்மிக்க, ஆரோக்கியமான பணியிடங்களை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். இந்தத் தருணங்கள் எங்களுக்கிடையிலான பொதுவான மனிதநேயத்தை நினைவூட்டுவதன் மூலம் ஈடுபாட்டுடனும் புத்துணர்வுடனும் சௌகரியமாகவும் எங்களை வைத்திருப்பதற்கு உதவுகின்ற, தொட்டுணர முடியாத மூன்றாம் பரிமாணமாகும். கலை மூலம் சுவாரசியமான முறையில் இந்த மனிதநேயப் பண்பை உணரலாம். 2010ம் ஆண்டு முதல், GoogleArts திட்டம், Google Arts & Culture முன்னெடுப்பு, Artist in Residence திட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைத் திட்டங்களை நாங்கள் Googleளில் நிறுவியுள்ளோம்.
இந்தக் கலைப்படைப்புச் சிந்தனையை Google Visitor Experienceஸில் (Googleளின் புதிய Gradient Canopy அலுவலகத்தில் உள்ளது) பிரத்தியேகமான பொதுக் கலைத் திட்டம் மூலம் எங்கள் விரிவான மவுண்டைன் வியூ சமூகத்திற்கும் விரிவுபடுத்தியுள்ளோம். வெளிப்புறப் பொதுப் பிளாசாவிலும் நடைபாதைகளிலும் ஆறு பொதுக் கலைப்படைப்புகள் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளன. இவை Google Visitor Experienceஸை அனைவருக்கும் சுவாரசியமான, பார்வையிடத் தூண்டும் இடமாக்க உதவுகின்றன.
உள்ளூர் கலைஞர்களாலும் உலகளாவிய கலைஞர்களாலும் உருவாக்கப்பட்ட இந்தக் கலைப்படைப்புகள் அனைத்தும் அவற்றின் அமைவிடத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை கட்டடங்களின் சுற்றுப்புறத்தில் பொதுமக்கள் கூடுவதற்கான இடங்களை உருவாக்க உதவுவதோடு விளையாட்டான, மகிழ்ச்சியான அனுபவங்களுக்கான வாய்ப்புகளையும் வழங்குகின்றன. அதே சமயம், Gradient Canopyயின் நற்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான பொருட்கள் தொடர்பான தீவிர இலக்குகளை அடைவதிலும் இந்தக் கலைப்படைப்புகள் தொடர்ந்து பங்கு வகிக்கின்றன. எந்தக் கலைப்படைப்பிலும் சிவப்புப் பட்டியலில் உள்ள பொருட்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை (அதாவது, சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு மிகுந்த தீங்கிழைக்கும் பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை). மேலும், அவை கழிவுகளைக் குறைப்பதற்கான/மீண்டும் உபயோகிப்பதற்கான முயற்சிகளிலும் உதவுகின்றன. கட்டடத்திலும் கட்டடத்திற்குள்ளேயும் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களைப் போலவே, கலைப்படைப்புகளும் இன்டர்நேஷனல் லிவ்விங் ஃபியூச்சர் இன்ஸ்டிட்யூட்டின் (ILFI) லிவ்விங் பில்டிங் சேலஞ்ச் (LBC) மெட்டீரியல்ஸ் பெட்டல் சான்றளிப்பைப் பெறுவதற்கான Gradient Canopyயின் முயற்சிகளில் பங்கு வகித்துள்ளன.
Gradient Canopyயில் பொதுக் கலைப்படைப்புகளுக்கான யோசனைகளையும் வடிவமைப்புகளையும் உருவாக்கும்போது, வெளிப்புறப் பிளாசாவை வியப்புடன் பார்க்க வைக்கும்படியான, மீண்டும் மீண்டும் அங்கு வருவதற்குத் தூண்டும்படியான ஈடுபடத்தக்க, விசித்திரமான கலைப்படைப்புகளைக் கண்டறிவதே எங்கள் இலக்காக இருந்தது. சுருக்கமாகக் குறிப்பிட வேண்டுமென்றால், அருங்காட்சியகம் போல் இல்லாமல், பிளாக் ராக் சிட்டியில் நடைபெறும் 'பர்னிங் மேன்' விழாவில் காட்சிப்படுத்தப்படுவது போன்ற கலைப்படைப்புகளை நிறுவுவதே எங்கள் விருப்பமாக இருந்தது. பிளாக் ராக் சிட்டி என்பது நெவாடா பாலைவனத்தில் ஆண்டுதோறும் உருவாக்கப்படும் தற்காலிக நகரமாகும் (அந்த நகரத்திற்கேற்ற, உணர்வுகளைத் தூண்டும் கலைப்படைப்பு நிறுவல்களுக்குப் புகழ்பெற்றது). பிளாசா கலைப்படைப்புக்கு உயிரூட்ட உதவுவதற்கான கூட்டாளரைத் தேடியதன் பலனாக, சமூகம் சார்ந்த கலைப்படைப்புத் தேர்வுச் செயல்முறையை ஒருங்கிணைக்க Burning Man Project எனும் லாப நோக்கமற்ற நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றினோம். சமூக ஈடுபாட்டின் மீது அந்நிறுவனத்துக்கு உறுதியான அர்ப்பணிப்பு இருந்ததால், ஈடுபடத்தக்க, பங்கேற்கத்தக்க மற்றும் உணர்வுகளைப் பிறருடன் பகிர்வதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய பொதுக் கலைப்படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எங்கள் இலக்குடன் அந்நிறுவனத்தின் இலக்கு பொருந்தியிருந்தது.