பொது இடங்களை உருவாக்குதல்

Designing vibrant places that respond to their local context and create benefits for everyone.

3 நிமிடங்கள்

Gradient Canopyயில் உள்ள பப்ளிக் பிளாசாவின் ஆரம்பக் கால ஓவியத்தைக் காட்டுகிறது.

பே வியூ மற்றும் Gradient Canopy மூலம், சூழலுக்குப் பாதுகாப்பான வடிவமைப்பில் உள்ளூர் சமூகங்களுக்கும் Googleளுக்கும் பரஸ்பர ஆதாயத்துடன் இருக்கக்கூடிய பிரகாசமான வரவேற்கத்தக்க இடங்களை உருவாக்க விரும்பினோம். எதுவாக இருந்தாலும், நாங்கள் எப்போதும் உதவிகரமான சுற்றத்தாரராகவே இருக்க முயல்கிறோம். இதன் காரணமாகவே, Gradient Canopyயில் சுற்றுப்புறத்தார், வருகையாளர்கள், Googlerகள் என அனைவருக்கும் ஏற்ற சமமான சமூக இடங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தினோம். எங்களைப் பொறுத்த வரையில், இது வேலை செய்ய சிறந்த இடங்களை வடிவமைப்பது மட்டுமல்ல, நமது உள்ளூர் சமூகங்கள் செழிக்க உதவும் வகையில் புதிய வழிகளை உருவாக்குவது பற்றியதாகும்.

"இந்த இடங்கள் எப்படி அனைவருக்கும் தொடர்புடைய வகையில் நல்ல சுற்றுச்சூழலையும் சமூகத் தாக்கத்தையும் கொண்டதாக உள்ளன என நாங்கள் கேட்கிறோம்"

– ஜோ வான் பெலெகெம், Googleளின் உலகளாவிய மேம்பாட்டு மையத்தின் மூத்த இயக்குநர்

Gradient Canopyயில், கட்டடத்தை அதன் சூழலுக்கு ஏற்ப அமைக்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம். கட்டடத்தையும் 18 ஏக்கர் பரப்பளவையும் சுற்றிப் பார்க்க, சைக்கிள் மற்றும் பாதசாரிகளுக்கான பாதைகளுடன் பிரத்தியேகப் பசுமை வளையம் உள்ளது. கட்டடத்தின் வெளிப்புறப் பொது இடங்களை இணைக்கும் பூர்வீக இயற்கை நிலக்காட்சி மற்றும் பொதுக் கலைப் படைப்பை இங்கே மக்கள் பார்த்து ரசிக்கலாம்.

மேற்குப்பக்கத்தில், Google Visitor Experienceஸுக்குப் பொதுமக்களை வரவேற்கும் விதமாக சார்லஸ்டன் பூங்காவிற்கு அருகில் கட்டடம் திறக்கப்படுகிறது. Cafeவில் நண்பர்களுடன் இணைதல், Huddle நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுதல், Google Storeரில் தயாரிப்புகளையும் சேவைகளையும் கண்டறிதல், Pop-Up Shopபில் உள்ளூர் பிசினஸ்களைக் கண்டறிதல் அல்லது பிளாசாவில் கலை மற்றும் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான உங்கள் ஆர்வத்தைத் தூண்டுதல் என அனைவருக்குமான இடமாக உள்ளது. மவுண்டைன் வியூ வளாகத்திற்கும் விரிவான வடக்கு பேஷோர் சுற்றுப்புறத்திற்கும் சமூக மையமாகச் செயல்படும் அதே வேளையில், உள்ளூர் லாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளை முன்னிலைப்படுத்த பல்வேறு நிகழ்வுகளையும் பயிலரங்குகளையும் Huddle வழங்குகிறது.

இந்த உட்புறச் சமூக இடங்கள் ஒரு பெரிய வெளிப்புறப் பொதுப் பிளாசாவுடன் இணைக்கப்படுகின்றன. இங்கே நாங்கள் சுற்றுப்புற நிகழ்வுகளை நடத்துவோம் மற்றும் சமூகத்திற்கும் Googlerகளுக்கும் இடையே அர்த்தமுள்ள தொடர்புகளை அதிகரிப்போம். பிளாசா முழுவதும் ஆறு பொதுக் கலைப்படைப்புகள் உள்ளன, மேலும் ஏராளமான பொது இருக்கைகள் உள்ளன.

மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக இருக்கும் மவுண்டைன் வியூ நகரத்தின் உழவர் சந்தை.

மக்கள் வடக்கு பேஷோரில் எப்படிப் பயணிக்கிறார்கள் என்பதை மேம்படுத்த, சார்ல்ஸ்டன் போக்குவரத்து வழித்தடத்தின் முதல் கட்டத்தை உருவாக்க மவுண்டன் வியூ நகரத்துடன் இணைந்து பணியாற்றினோம். இது பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும், பைக் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும். மேலும் கார் இல்லாமல் வடக்கு பேஷோரைச் சுற்றி வருவதை எளிதாக்கும். Gradient Canopy திட்டத்தின் ஒரு பகுதியாக, வளாகத்தை ஒட்டிய சார்லஸ்டன் சாலையில் இரண்டு போக்குவரத்து மையங்கள் கட்டப்பட்டன. இந்த வசதிகள் மட்டுமல்லாமல், சார்ல்ஸ்டன் சாலை மற்றும் ஷோர்லைன் புலவார்டு பகுதியில் திட்டமிடப்பட்ட பேருந்து மட்டுமே செல்லக்கூடிய பாதைகளை அமைப்பது அப்பகுதியின் போக்குவரத்து விருப்பங்களை மேம்படுத்தும்.

சார்ல்ஸ்டன் போக்குவரத்து வழித்தடத்தில் உலகத் தரம் வாய்ந்த சைக்கிள் மற்றும் பாதசாரிகளுக்கான பாதைகளும் உள்ளன – கிளாஸ் IV எனப் பிரிக்கப்பட்ட பைக் பாதைகளும் அடங்கும், இவை சைக்கிள் பாதைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. கட்டடத்தின் உள்ளே 780க்கும் மேற்பட்ட பைக் பார்க்கிங் இடங்கள், பைக் லாக்கர்கள், ஷவர் வசதிகள் ஆகியவற்றுடன் "இரு சக்கர வாகனப்" பயணத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

இந்தக் கதை வாசிப்பாளர்களுக்கான குறிப்பு: இந்தக் கதை முதலில் மே 2022ல் வெளியிடப்பட்டது, மேலும் சமீபத்திய திட்ட விவரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஆகஸ்ட் 2023ல் புதுப்பிக்கப்பட்டது.