Gradient Canopyயில், இண்டர்நேஷனல் லிவ்விங் ஃபியூச்சர் இன்ஸ்டிட்யூட் (ILFI) லிவ்விங் பில்டிங் சேலஞ்ச் (LBC) மெட்டீரியல்ஸ் பெட்டல் சான்றளிப்பில் நாங்கள் பங்கேற்றோம். இதன்மூலம் நச்சுத்தன்மையற்ற, சூழலுக்கேற்ப மறுசீரமைக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவது எங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது. இந்தக் காரணத்திற்காக, மரக்கட்டைகளின் மீண்டும் உருவாக்கக்கூடிய, கார்பன் சீக்குவஸ்டிரேஷன் தன்மைகளைப் பயன்படுத்தும் நோக்கத்துடன் சூழலுக்குப் பாதுகாப்பான முறையில் பெறப்பட்ட மாஸ் டிம்பரைக் கட்டடத்தில் பயன்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிந்தோம்.
மாஸ் டிம்பர் என்பது வழக்கமான கட்டுமான அணுகுமுறைகளுடன் ஒப்பிடும்போது தூண்கள், விட்டங்கள், சுவர்கள், தரைகள், கூரைகள் ஆகியவற்றை உருவாக்க மரக்கட்டைகளின் உள்ளிருக்கும் கார்பனின் அளவைக் குறைக்கும் வகையில் அவற்றை ஒன்றாக அழுத்திப் பயன்படுத்தும் ஒரு கட்டுமானத் தொழில்நுட்பமாகும். இறுதியில், கட்டடத்தில் மாஸ் டிம்பர் முக்கியமானதாக மாறியுள்ளது. இங்கு நாங்கள் கற்றுக்கொண்டதை Googleளின் பிற கட்டுமானத் திட்டங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம்.
தனது உயிரியல்பு சார்ந்த பண்புகள் மூலம் ஆரோக்கியமான, கூடுதல் உற்பத்தித் திறன்மிக்க, உத்வேகமூட்டும் தோற்றத்திலான பணியிடங்களை ஊக்குவிப்பதால் மாஸ் டிம்பரின் ஆற்றல் குறித்து நாங்கள் சிறிது காலமாக ஆர்வம் காட்டுகிறோம். உயிரியல்பு என்பது வடிவமைப்புடன் இயற்கையை ஒருங்கிணைத்து மனிதர்கள் ஆற்றலுடன் செயல்படுவதற்கான இடங்களை உருவாக்குவதாகும். கட்டடத்திற்குள் வெளியே தெரியும்படியான மரக்கட்டைகளை இணைப்பதால் கோட்டிங்குகள், பெயிண்ட் போன்ற கூடுதல் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான தேவை குறைவது மட்டுமன்றி, உள்ளிருக்கும்போதும் கூட இயற்கையுடன் இணைந்திருப்பதாக உணர்வதற்கும் மனிதர்களுக்கு உதவுகிறது. எனவே, Gradient Canopyயின் வடிவமைப்பை நாங்கள் தொடங்கியபோது, முதலில் கட்டடத்தின் மொத்தக் கட்டுமானத்திலும் மாஸ் டிம்பரைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம். ஆனால் எங்களுக்குத் தேவையான நீண்ட தொலைவுகளுக்கு அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. எனினும் கட்டடத்திற்குள் இருக்கும் சில கட்டுமானப் பகுதிகளில் எங்களால் மரக்கட்டைகளைப் பயன்படுத்த முடிந்தது.
Gradient Canopyயில், மாஸ் டிம்பர் கூறுகளைக் கிராஸ் லேமினேட்டட் டிம்பர் (CLT) பாகங்களின் வடிவத்தில் பயன்படுத்துகிறோம். இது மேம்பட்ட கட்டுமான உறுதித்தன்மைக்காக, வெட்டப்பட்ட மரக்கட்டைகளின் ஒன்றுக்கும் மேற்பட்ட அடுக்குகளை ஒட்டி உருவாக்கப்பட்ட மரத் துண்டுகளாகும். CLTயை நாங்கள் இரண்டாம் தளத்தின் கான்கிரீட் தரைகளுக்கான சட்டக அமைப்பாக (கான்கிரீட்டை ஊற்றுவதற்கு உருவாக்கப்பட்ட அச்சுகள்) பயன்படுத்தத் தொடங்கினோம், இது கூட்டு வலிமையை வழங்குகிறது. கான்கிரீட் உறுதியானதும் மரக்கட்டைகளை அகற்றி அப்புறப்படுத்தும் வழக்கமான நடைமுறைக்கு மாறாக, தரைத்தளத்தில் வெளியில் தெரியும் வகையில் மர மேற்கூரையாகவும், உட்புற முற்றங்களுக்கான பாதுகாப்புத் தடுப்புகளாகவும் CLT சட்டக அமைப்பைப் பயன்படுத்தியுள்ளோம். கட்டடம் முழுவதும் உள்ள கதவுகள் மற்றும் கதவின் சட்டகங்களிலும் (குறிப்பாக, மீட்டிங்கிற்கான இடம் மற்றும் கான்ஃபிரன்ஸ் அறைகளில்) மரக்கட்டை பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, ஆரோக்கியமான உட்புறச் சூழலை உருவாக்க, பாதுகாப்பான வேதியியல் பண்புகளை வெளிப்படுத்தும் கட்டுமானப் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க எங்களுக்கு உதவும் வகையில், அனைத்துக் கதவுகளுக்கும் Declare லேபிள் சான்றிதழைப் பெற விற்பனையாளருடன் இணைந்து பணியாற்ற குழுவால் முடிந்தது.