உள்ளரங்க முற்றங்கள்

பல நிலை அணுகல், கேஷுவல் மீட்டிங்குகள் போன்றவற்றை ஊக்குவிக்கும் பொது இடங்களை வடிவமைப்பது.

5 நிமிடங்கள்

படம்: மார்க் விக்கென்ஸ்.

Gradient Canopyயில் இருபது உள்ளரங்க முற்றங்கள் உள்ளன. படம்: மார்க் விக்கென்ஸ்.

Google தொடங்கப்பட்டதிலிருந்தே, எங்கள் நிறுவனத்தின் வெற்றி எங்களின் பணியாளர்கள் கையில்தான் உள்ளது என்பதை நாங்கள் முழுமனதாக நம்புகிறோம். இதனால்தான் Googlerரின் மகிழ்ச்சி, ஒட்டுமொத்த உடல்நலன் ஆகியவற்றுக்காக எங்கள் இடங்களை வடிவமைப்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். Gradient Canopyயில், கட்டடத்தை இரண்டு தளங்களாக மட்டுமே பிரித்தல் போன்று உட்புறத்தை ஒழுங்கமைக்க நாங்கள் பயன்படுத்திய பெரிய வடிவமைப்பு யோசனைகளில் ஒன்றாக பயனர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறை விளங்குகிறது. இங்கே, பணியாளர்கள் மற்றும் குழுவுக்கான இடங்கள் மேல் தளத்தில் உள்ளன. மேலும் இங்குள்ள தொடர்ச்சியான உட்புற 'முற்றங்கள்' கீழ் தளத்தில் இருக்கும் கான்ஃபிரன்ஸ் அறைகள், முற்றங்கள், அனைத்துக் குழுக்களுக்கான இடங்கள் ஆகிய வசதிகள் உள்ள இடங்களுடன் இந்தத் தளத்தை இணைக்கின்றன.

இரண்டாவது தளத்தில் உள்ள பணியிடங்கள் நற்சூழல் பாதுகாப்பு, சூழலுக்கேற்ப மாறுதல், கவனத்துடன் பணியாற்றுதல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. மேல் தளம் முழுவதும் ப்ரீஃபேப்ரிகேட் செய்யப்பட்ட அறைகள், சுவர்கள், சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஃபர்னிச்சர் ஆகியவற்றைக் கொண்டது. புதிய வடிவமைப்புகளுக்கு அதே பொருட்களை மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதால் இந்த இடங்களைத் தேவைக்கேற்ப கழிவு ஏதுமில்லாமல் எளிதாக மாற்றிக்கொள்ளலாம். கவனத்துடன் வேலை செய்ய இந்தத் தளத்தில் அதிக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் கீழ்த்தளத்தில் நாள் முழுவதும் மனதிற்கும் உடலுக்கும் ஓய்வளிப்பதற்கான மற்றும் கூட்டுப்பணி செய்வதற்கான இடங்கள் உள்ளன.

Gradient Canopyயின் முதல் தளத்தில் இருக்கும் உட்புற முற்றங்கள் மக்களை ஒன்றிணைத்து, அனைவருக்கும் ஆரோக்கியமான, உற்பத்தித் திறன் மிக்க சூழல்களை வழங்குவதன் மூலம் எங்கள் குழுக்கள் சிறப்பாகச் செயல்பட உதவுகின்றன. வழக்கமான அலுவலகங்களில் தனிநபர் வேலை செய்யும் இடங்களுடன் பல்வேறு பணிச் செயல்பாடுகளுக்கான பகுதிகளும் ஓய்வு இடங்களும் ஒன்றாகக் கலந்து இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இரண்டு தளங்களையும் இணைக்கும் திறந்தநிலைப் படிக்கட்டுகளுடன் கூடிய மொத்தம் 20 முற்றங்கள் உள்ளன. இவை வசதிகள் அனைத்தையும் அணுகுவதை எளிதாக்கும் அதே வேளையில் குழுக்கள் பல விதங்களில் பயன்படுத்தக்கூடிய மற்றும் எளிதில் மாற்றக்கூடிய பன்முகத் தேவைகளுக்கான இடங்களாகவும் உள்ளன.

முற்றங்கள் அதிகச் செயல்பாட்டுப் பகுதிகளிலிருந்து கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளைப் பிரிக்க உதவுவதால் பணியாளர்கள் தங்களின் சிறந்த பணியைச் செய்யலாம். இவை உயிரியல்புப் பலன்களை வழங்குவதோடு Googlerகள் நாள் முழுவதும் புத்துணர்ச்சி பெறவும் உதவுகின்றன. சிறந்த வடிவமைப்புகள் இயற்கைக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் இடையில் ஆழமான தொடர்பை வெளிப்படுத்தும் என்பதை அறிவோம். அதனால் மக்கள் வளர்ச்சியடையக்கூடிய இடத்தை உருவாக்க Gradient Canopyயில் உயிரியல்பு வடிவமைப்புக் கொள்கைகளை இணைத்துள்ளோம். இயற்கை நமக்கு அளிக்கும் அனுபவங்களைப் போலவே பல உணர்வுகளை அளிக்கும் பல்வேறு வகையான இடங்களை உயிரியல்பு வடிவமைப்புகள் வழங்குகின்றன. தளங்களுக்கு இடையில் பொதுமக்கள் நடக்கும்போது உடலியல் பலன்களைப் பெற முற்றங்கள் உதவுகின்றன. இவை நாள் முழுவதும் மக்கள் சிறப்பாகச் சிந்தித்து படைப்பாற்றலை வெளிக்காட்ட அவர்களுக்குப் புதிய வழிகளை வழங்குகின்றன. மேலே உள்ள ஜன்னல்கள் வழியாகப் பகல் வெளிச்சத்தைக் கீழ் தளத்திற்குள் கொண்டு வரவும் இவை உதவுகின்றன. இதனால் உங்கள் சர்க்காடியன் சுழற்சி நன்றாகச் செயல்படும்.

படம்: மார்க் விக்கென்ஸ்.

பணியிடத்தின் இரண்டாம் தளம், சூழலுக்கேற்ப மாறுதல் மற்றும் உயிரியல்பு வடிவக் கொள்கைகளைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டது. படம்: மார்க் விக்கென்ஸ்.

உட்புற முற்றங்களின் வடிவமைப்பு Gradient Canopyயை அதன் சுற்றுப்புறங்களுடன் இணைப்பதோடு மக்களை இடத்துடன் இணைக்கவும் உதவுகிறது. ஒவ்வொரு முற்றமும் நமது விரிகுடா பகுதி அலுவலகத்தைப் போல, நான்கு வெவ்வேறு பல்லுயிர் பகுதிகளில் ஒன்றில் இருந்தோ இயற்கை வாழ்விடங்களில் இருந்தோ ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது: பெருங்கடல், விரிகுடா பகுதி, மலை அடிவாரம் மற்றும் செம்மரம். கட்டடம் நான்கு பகுதிகளாக ஒழுங்கமைக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பல்லுயிர் பகுதி வழங்கப்பட்டுள்ளதால், இந்தத் தீம் கொண்ட பல்லுயிர் பகுதிகள் வழியைக் கண்டறியவும் உதவுகின்றன.

முற்றங்களில் பல்லுயிர் பகுதிகள் ஒவ்வொரு இடத்திலும் வண்ணத் தட்டு, கலை, ஃபர்னிச்சர், ஃபினிஷிங்குகள் ஆகியவற்றின் தீமைக் காட்டுபவையாகத் திகழ்கின்றன. இவற்றில் பல செயல்கள் அனுபவப்பூர்வமானவை மற்றும் தத்ரூபமானவை. இவை பொது இடங்களை உருவாக்கும் உணர்வை ஏற்படுத்தி நாள் முழுவதும் பணியாளர்களுக்கு ஆச்சரியமான மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை அளிக்கின்றன. உதாரணத்திற்கு, பெருங்கடல் பல்லுயிர் பகுதியில் 'புய் விரிகுடா பகுதி' என அழைக்கப்படும் ஒரு முற்றம் பெருங்கடலின் மேற்பரப்பில் பிரதிபலிக்கும் ஒளியின் பாதையில் இருந்து ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. செம்மரப் பல்லுயிர் பகுதியில், ‘கிளோவர் முகாம்’ என்ற பெயர் கொண்ட மற்றொரு முற்றத்தின் தளம் செம்மரச் சோரல் கிளோவர்களின் கிராஃபிக்ஸால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது காட்டுப் பகுதியில் செழித்து வளரும் கிளோவர்களின் நிலப்பரப்பைக் குறிக்கிறது. பல முற்றங்களுக்கு, படைப்பாற்றல், ஆர்வம் மற்றும் ஊக்கத்தைத் தூண்டும் தளம் சார்ந்த கலை வடிவங்களை உருவாக்க உள்ளூர் கலைஞர்களுடன் நாங்கள் பணியாற்றினோம்.

Gradient Canopyயில் உள்ள வெவ்வேறு உள்ளரங்க முற்றங்கள். படம்: மார்க் விக்கென்ஸ்.

Googlerகளுக்கு முற்றங்கள் பல வகையான அன்றாடப் பணிகளில் உதவுகின்றன. நடமாடுவதை ஊக்குவிப்பது மற்றும் பலவிதமான உணர்ச்சி அனுபவங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் வழித்தடங்களைக் கண்டறியும் சாதனங்களாகவும் அவை பயன்படுகின்றன. கட்டடத்தில் மக்கள் தாங்கள் இருக்கும் பகுதிக்கு ஏற்ப வேடிக்கையாகவும் ஊக்கமளிக்கும் வகையிலும் மாற அவை உதவுகின்றன. இறுதியாக, இயற்கைச் சூழலின் உறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு முற்றங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால், கட்டடத்தை அதன் சுற்றுப்புறத்துடன் தொடர்புப்படுத்திக்கொள்ள இவை உதவுகின்றன. மேலும், இவை பயனர்கள் உள்ளே இருக்கும்போதுகூட இயற்கையுடன் ஆழமாக இணைந்திருப்பதாக அவர்களுக்கு நினைவூட்டுகின்றன.