தீங்குவிளைவிக்காத பொருட்கள்

ஆரோக்கியம் மற்றும் நச்சுத்தன்மையற்ற பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து கட்டடத்தை உருவாக்குகிறோம்.

5 நிமிடங்கள்

படம்: Googleளுக்காக இவான் பான் எடுத்தது.

Gradient Canopy மற்றும் Google Visitor Experience கட்டடத்தின் டிராகன்ஸ்கேல் வடிவிலான சோலார் மேற்கூரையைக் காட்டும் மேல்மட்டக் காட்சி. படம்: Googleளுக்காக இவான் பான் எடுத்தது.

பல தசாப்தங்களாக ஆரோக்கியமான உட்புறச் சூழல்களை எப்படி வடிவமைப்பது என்பதை நாங்கள் ஆராய்ந்துள்ளோம். Googleளின் நிறுவனர்கள் எங்கள் பழைய கட்டடங்களில் காற்றுத்துகள் கண்காணிப்புக் கருவிகளைக் கையில் பிடித்துக்கொண்டு உட்புறக் காற்றின் தரத்தை அளந்த காலம் முதல், மறுசீரமைக்கப்பட்ட கட்டட உட்புறங்களில் தேவையற்ற நச்சுப் பொருட்களை நாங்கள் சேர்க்காமல் இருப்பதை உறுதிசெய்ய பல வருடங்களாக ஆயிரக்கணக்கான தயாரிப்புகளைப் பரிசோதித்து வருவது வரை, ஆரோக்கியமான பணியிடங்களை உருவாக்குவதில் நீண்டகாலமாக நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இன்டர்நேஷனல் லிவ்விங் ஃபியூச்சர் இன்ஸ்டிட்யூட்டின் (ILFI) லிவ்விங் பில்டிங் சேலஞ்ச் (LBC) மெட்டீரியல்ஸ் பெட்டல் சான்றளிப்பைப் பெற்ற மிகப்பெரிய திட்டப்பணிகளில் ஒன்றாக Gradient Canopy இருப்பதில் பெருமைகொள்கிறோம். சூழ்மண்டலத்தை மீட்டெடுக்க உதவுகின்ற, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய, நச்சுத்தன்மையற்ற பொருட்களின் செயலமைப்பை உருவாக்குவதே இந்தச் சான்றளிப்பின் நோக்கமாகும்.

Gradient Canopy மற்றும் Google Visitor Experienceஸில் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியமான பொருட்களைப் பயன்படுத்துவதற்கே முன்னுரிமை அளித்தோம். கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள எந்தவொரு பொருளும் LBCயின் சிவப்புப் பட்டியலில் இல்லை என்பதை உறுதிசெய்ய, அதன் உற்பத்தியாளருடன் இணைந்து மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் உள்ளவை மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் மோசமான ரசாயனங்களாகும். கட்டுமானத் துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கான எங்கள் முயற்சியில் பங்கேற்றுள்ள உற்பத்தியாளர்களுடன் இணைந்து Gradient Canopyயில் மொத்தமாக 8,000க்கும் மேலான தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்துள்ளோம்.

கட்டட உட்புறங்கள் மற்றும் அதனுள் தினந்தோறும் வேலை செய்யும் Googlerகளை மட்டுமின்றி மேலும் பல விஷயங்களையும் கருத்தில்கொண்டே Gradient Canopyயில் ஆரோக்கியமான பொருட்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். கட்டடத்தின் வெளிப்புறத்தைச் சுற்றி நிறுவப்பட்டுள்ள ஆறு பொதுக் கலைப்படைப்புகள் உட்பட கட்டடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பயன்படுத்துவதற்கான பொருட்களைப் பரிசோதித்துப் பார்த்ததன் மூலம், விநியோகச் சங்கிலியைச் சார்ந்த சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும் எங்கள் கட்டுமானத் தயாரிப்புகளின் முழுமையான ஆயுள் சுழற்சிக்கும் முன்னுரிமை அளிப்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. அதாவது, பார்க்கவும் தொடவும் முடிகின்ற பொருட்கள் (தரை விரிப்பு, சுவர்கள் போன்றவை), வெளிப்படையாகத் தெரியாத பொருட்கள் (ஜன்னல் பூச்சுகள், கட்டட இன்சுலேஷன் போன்றவை) உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் தேர்ந்தெடுக்கும்போது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக உற்பத்தியாளர்களுடன் இணைந்து அவற்றைக் கவனமாகப் பரிசோதித்துள்ளோம்.

Googleளுக்காக இவான் பான் எடுத்தது.

கிராஸ் லேமினேட் செய்யப்பட்ட மாஸ் டிம்பர் மரக்கட்டை, ஜன்னல் கோட்டிங்குகள், தரைவிரிப்பு, உலர்ந்த சுவர் போன்ற தீங்குவிளைவிக்காத பொருட்கள் கட்டடம் முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளன. படம்: Googleளுக்காக இவான் பான் எடுத்தது.

இவை அனைத்தும் இந்தக் கட்டடம் மற்றும் இதில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பற்றியது மட்டுமல்ல. பொருட்கள் தொழில்துறையில் மாற்றத்தைக் கொண்டுவரும் எங்கள் முயற்சியின் ஒரு பகுதியாக, தங்கள் தயாரிப்புகளில் (குறிப்பாக, பொருட்கள் பற்றிய வெளிப்படைத்தன்மை பெரிதும் இல்லாத தொழில்துறைகளிலும் தயாரிப்பு வகைகளிலும்) Declare லேபிள்களைச் சேர்க்கும்படி உற்பத்தியாளர்களை Gradient Canopy குழுவினர் ஊக்குவித்தனர். LBCயின் சிவப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இரசாயனங்கள் இல்லாத, பொறுப்புடன் பெறப்பட்ட கட்டுமானப் பொருட்களின் மூலக்கூறுகள் பற்றிய தெளிவான தகவல்களை இந்த லேபிள்கள் வழங்குகின்றன. உதாரணமாக, இந்தத் திட்டப்பணியில் பயன்படுத்தப்பட்டுள்ள பெரும்பாலான மரக் கதவுகளுக்கும் மரச் சட்டங்களுக்கும் திட்டப்பணியின் தொடக்கத்தில் Declare லேபிள் இல்லை. ஆனால் பிற்காலத்தில் அவை Declare லேபிளைப் பெற்றன.

படம்: மார்க் விக்கென்ஸ்

Hou de Sousaவின் Declare லேபிளைப் பெற்ற 'கோ' எனும் கலைப் படைப்பு. தீங்குவிளைக்கும் பிளாஸ்டிக் பட்டியலில் இடம்பெறாத பிளாஸ்டிக்கைக் கொண்டு இதன் டிஸ்க்குகள் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த லேபிளைப் பெற்றுள்ளது. படம்: மார்க் விக்கன்ஸ்

இறுதியாக, Gradient Canopyயில் ஆரோக்கியமான பொருட்களைப் பயன்படுத்தும் இலக்கை அடைந்ததன் மூலம், உற்பத்தி மற்றும் வளங்கள் சார்ந்த மிக விரிவான உலகளாவிய சமூகத்தின் ஒரு பகுதியாக நாங்கள் இருக்கிறோம். பொருட்களுக்கான மிகச் சவாலான LBC தரநிலைகள் காரணமாக, மொத்தத் திட்டப்பணிக் குழுவினரையும் இலக்குகளை நோக்கி ஒருங்கிணைப்பதோடு அவர்கள் தங்கள் வழக்கமான செயல்பாடுகளுக்கும் வழிமுறைகளுக்கும் பதிலாகப் புதுமையான அணுகுமுறைகளைப் பின்பற்றுவதற்குத் தயாராக இருக்க வேண்டியிருந்தது. வடிவமைப்பாளர்கள், உற்பத்தியாளர்கள், துணை ஒப்பந்ததாரர்கள், வணிகர்கள் மற்றும் கட்டுமானப் பணியாளர்கள் இடையே நல்லுறவுகளை உருவாக்கியது, மொத்தக் குழுவினரும் தங்கள் வளங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதற்கும் ஒருவரிடம் இருந்து மற்றொருவர் கற்றுக்கொள்வதற்கும் உதவியது. இப்போது, இந்தக் குழுவிலுள்ள உறுப்பினர்கள் நாடு/பிராந்தியத்தின் எந்தவொரு பகுதியிலும் புதிய திட்டப்பணிகளுக்கு இடம்பெயரும்போது, எதிர்காலக் கட்டுமானத்திற்கு ஆரோக்கியமான பொருட்களைப் பரிசோதித்துத் தேர்ந்தெடுப்பது மற்றும் அவற்றைப் பயன்படுத்தி வடிவமைப்பது தொடர்பான வலுவான திறமைகளைக் கொண்டிருப்பார்கள்.