பொதுவாக, பார்க்கிங் கேரேஜ்களின் கட்டுமானத்தில் பெரிய அளவில் புதுமைகள் இருக்காது. நினைத்த இடத்திற்குச் சென்றடைய கார்களைச் சார்ந்துள்ள பெரும்பாலானோரின் தேவையை அது நிறைவுசெய்கிறது. ஆனால் கார்பன் உமிழ்வையும் போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும் வகையில், குறைவான கார்களும் சூழலுக்கு மேலும் பாதுகாப்பான போக்குவரத்து முறைகளும் உள்ள சாத்தியமான எதிர்காலத்தை நோக்கி நாம் நகரும்போது, பார்க்கிங் இடங்களுக்கான தேவைகள் குறைந்துவிடும். அதனால், ஒற்றை நோக்கத்திற்காக வடிவமைக்கப்படும் பார்க்கிங் கேரேஜ்கள் பொருத்தமற்றவையாக மாறிவிடும். மேலும் அவை தகர்க்கப்படலாம். இது கழிவு, கார்பன் மற்றும் செலவை அதிகரிக்கும். எனவே, Mountain Viewவில் உள்ள Googleளின் புதிய Alta Garage எதிர்காலத்தில் பார்க்கிங் கேரேஜாக மட்டுமே எஞ்சுவதில் இருந்து தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உரிய தருணம் வரும்போது தொழில்ரீதியான, வீட்டு அல்லது சமூகப் பயன்பாட்டிற்கேற்ப அதை எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.
இந்த யோசனைக்கு எதிர்காலத்தைக் கருத்தில்கொள்ளும் பார்க்கிங் என்று பெயர்: சமூகத்தின் தேவைகள் எதிர்காலத்தில் மாறும்போது Alta Garage பயன்பாடும் மாறலாம். அலுவலகங்கள், வீடு, வசதிகள் அல்லது நிகழ்வுக்கான இடங்கள் கூடுதலாகத் தேவையா? பார்க்கிங்கிற்கான தேவைகள் குறையும்போது Alta Garage இவற்றில் எதுவாக வேண்டுமானாலும் மாறலாம். அதுவும், செலவைக் குறைத்து, நேரத்தை மிச்சப்படுத்தி, கழிவுகளைக் குறைத்து சூழலுக்குப் பாதுகாப்பான வழிமுறையில் இதைச் செய்ய முடியும்.