இந்தப் பகுதியின் சிறப்பம்சம் குறித்து மேலும் எங்களிடம் கூற முடியுமா?
இங்குள்ள புதுமைக் கலாச்சாரம் அனைவரையும் ஈர்க்கக்கூடியதாகவும் எப்போதும் ஒரு பேசுபொருளாகவும் உள்ளது. உலகில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு அனைவரது மனதிலும் ஆழமாக உள்ளது. அதுதான் Google மற்றும் Alphabetடில் எங்களை ஊக்குவிக்கிறது. இங்கு வாழ்வதற்கும் பணியாற்றுவதற்கும் தேர்வுசெய்யும் பலருக்கும் இதுவே உந்துதலாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். சிலிக்கான் பள்ளத்தாக்கில், ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற உந்துதல் இருக்கிறது, அதுதான் அதை மிகவும் தனித்துவமான இடமாக மாற்றுகிறது என நான் நினைக்கிறேன்.
Googleளுக்கும் மவுண்டைன் வியூவுக்கும் என்ன தொடர்பு?
1999 முதல், Google மவுண்டைன் வியூவைத் தனது தாயகமாகக் கொண்டுள்ளது. இது இன்னும் பல வருடங்களுக்கு நீடிக்கும் எனக் கருதுகிறோம். மவுண்டைன் வியூவைப் பற்றிய அனைத்தையும் நாங்கள் விரும்புவதால் அதைத் தலைமையகமாக Google தேர்வுசெய்துள்ளது. விரிகுடாவின் அழகு, பல்கலைக்கழகங்களுக்கு அருகாமையில் இருப்பது, குடும்பத்திற்கேற்ற சுற்றுச்சூழல், சிலிக்கான் பள்ளத்தாக்கின் மையப்பகுதியில் உள்ள நகரத்தில் பணியாற்றும் வாய்ப்பு ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம்.
எங்கள் பணியாளர்களில் பலர் மவுண்டைன் வியூவில் வசித்துப் பணியாற்றுகிறார்கள், ஒரு நிறுவனமாக, சுற்றுப்புறத்தில் உள்ளவர்களுக்கு நல்ல உதவிகரமாக இருப்பதற்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். பல ஆண்டுகளாக, நாங்கள் சமூகத்தில் லட்சக்கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளோம். இதில் STEM கல்வியை ஆதரிப்பதற்காக மவுண்டைன் வியூ கல்வி அறக்கட்டளைக்கு வழங்கிய நிதி, மவுண்டைன் வியூ சமூகப் போக்குவரத்திற்கு வழங்கிய நிதி, வீடற்றோருக்கான மீட்புத் திட்டத்தையும் பாதுகாப்புச் சேவைகளையும் ஆதரிக்க வழங்கிய நிதி, சார்லஸ்டன் ரிடென்ஷன் பேசின் போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த மீட்டெடுப்புத் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.
மவுண்டைன் வியூவை அடிப்படையாகக் கொண்ட மவுண்டைன் வியூ சமூகச் சேவைகள் ஏஜென்சி, சிலிக்கான் வேலி பைசைக்கிள் எக்ஸேஞ்ச், மவுண்டைன் வியூ பள்ளிகள், வியத்தகு கம்ப்யூட்டர் ஹிஸ்டரி மியூசியம் போன்ற நிறுவனங்களுடன் Googlerகள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மணிநேரம் தன்னார்வத் தொண்டு செய்கிறார்கள் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
இந்தப் பிராந்தியத்துடனான Googleளின் நீண்டகாலத் தொடர்பை Gradient Canopy, பே வியூ ஆகிய இரண்டும் எப்படித் தொடர்ந்து பராமரிக்கின்றன?
Gradient Canopy என்பது மவுண்டைன் வியூவில் எங்களின் முதல் அடிப்படை மேம்பாடாகும். மேலும் நார்த் பேஷோரின் எதிர்கால நகரத்தின் இலக்கை நிறைவேற்றும் ஒரு திட்டத்தை எப்படித் திறம்பட உருவாக்குவது என்பதை நாங்கள் கவனமாகக் கருத்தில் கொண்டோம். சமூகத்தை வரவேற்கும், இயற்கைச் சூழலுடன் இணக்கமாக ஒன்றிணையும், நகரத்திற்கு மிகப்பெரிய பொருளாதார மதிப்பை வழங்கும், மேலும் மவுண்டைன் வியூவில் வாழ்வதையும் பணியாற்றுவதையும் நேசிக்கும் எங்கள் பணியாளர்களை ஆதரிக்கும் நோக்கமுடைய வடிவமைப்பு மூலம் Gradient Canopy பணியிடத்தை மறுமதிப்பீடு செய்கிறது.
பெருந்தொற்றுக்கு முன்பிருந்தே, இந்த இடங்கள் ஆரோக்கியமானவையாக, சூழலுக்குப் பாதுகாப்பானவையாக, நடைமுறைக்குரியவையாக, சற்று Googleளுக்கே உண்டான உள்கட்டமைப்புடன் உள்ளன என்பது Google பணியிடங்களின் சிறப்பம்சமாகும். பணியாளர்கள் சிறந்த வடிவமைப்பு உள்ள இடங்களில் இருக்க விரும்புகிறார்கள், மேலும் அதற்கான சான்று என்னவென்றால், எங்கள் அலுவலகங்கள் பாதுகாப்பாக மீண்டும் திறக்கப்பட்டவுடன் உலகெங்கிலும் உள்ள எங்கள் பெரும்பாலான பணியாளர்கள் தானாக முன்வந்து அலுவலகத்திற்குத் திரும்பினார்கள். இப்போது, எங்கள் அடிப்படைத் திட்டங்கள் மூலம் இந்த உறுதிப்பாடுகள் மற்றும் கற்றுக்கொண்ட பலவற்றை உள்ளூர் சமூகத்திற்கு வழங்க முடியும். இந்த இடங்கள், எப்படிச் சமூகத்தை ஈடுபடுத்துகின்றன, மீள்திறனை உருவாக்குகின்றன மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன என்பதில் நாங்கள் தீவிரமாகக் கவனம் செலுத்துகிறோம்.