உங்கள் வருகையைத் திட்டமிடுங்கள்

Google Visitor Experienceரில் எங்களைச் சந்தியுங்கள்

வேலை நேரத்தின்போது எப்போது வேண்டுமானாலும் Google Visitor Experienceஸுக்கு வாருங்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களைக் கொண்ட திட்டமிடப்பட்ட நிகழ்விற்கு வரவில்லை என்றால் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டியதில்லை.

திங்கள் முதல் சனி வரை

Google Store
9:00 a.m. - 7:00 p.m.
Huddle, Cafe, Pop-Up Shop
9:00 a.m. - 6:00 p.m.

ஞாயிறு

Google Store
10:00 a.m. - 6:00 p.m.
Huddle, Cafe, Pop-Up Shop
10:00 a.m. - 5:00 p.m.
place

இங்கே வருவதற்கான வழிகள்

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மவுண்டைன் வியூ Googleளின் வீடாகத் திகழ்கிறது. அதனால் முதல் Google Visitor Experience இங்கே அமைந்துள்ளதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

உங்கள் மோட்டார் வாகனம், சைக்கிள் அல்லது பொதுப் போக்குவரத்து என எதில் சென்றாலும் Google Visitor Experienceஸுக்குச் செல்ல பல வழிகள் உள்ளன.

Transportation Tips

directions_car

மோட்டார் வாகனம் மற்றும் வாகன நிறுத்துமிடம்

directions_bus

பொதுப் போக்குவரத்து

pedal_bike

சைக்கிள் நிறுத்துமிடம்

local_taxi

ரைடுஷேர்

Free parking is available at:

  • Shoreline Amphitheatre Parking Lot C (directions) is located north of the Google Visitor Experience at 1 Amphitheatre Pkwy (~4 minute walk). Lot C is closed on concert days, so we recommend parking at Alta Garage on these days.
  • Alta Garage (directions) is located at 1001 Alta Ave (~8 minute walk). EV charging is available at Alta Garage.
  • ADA parking is available at both Lot C and Alta Garage. Additionally, an ADA-accessible drop off zone is located at the western building entrance in front of the Google Store.

Take a virtual look around

The below video was created using Google Street View technology, and offers a look inside the Google Store, Cafe, and Huddle. You can also visit Google Maps to explore Street View of the public spaces and art.

Video preview image

Take a virtual look around

உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்

Google Visitor Experience பற்றிய பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.

Google Visitor Experienceஸைப் பார்வையிட கட்டணம் செலுத்த வேண்டுமா?

Google Visitor Experienceஸை இலவசமாகப் பார்வையிடலாம்! வேலை நேரத்தின்போது எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வந்து பார்க்கலாம், Google Store, Huddle, Plaza ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளில் இலவசமாகப் பங்கேற்கலாம். விருப்பம் இருந்தால், Cafeயில் உணவு மற்றும் பானங்களையும் Google Storeரில் தயாரிப்புகளையும் Pop-Up Shopபில் பொருட்களையும் வாங்கலாம்.

Google Visitor Experienceஸுக்கு உணவையும் பானங்களையும் நான் கொண்டு வரலாமா?

ஆம். வெளிப்புற Plaza அல்லது அருகில் உள்ள சார்லஸ்டன் பூங்காவில் நேரத்தைச் செலவிட உங்களின் சொந்த உணவையும் ஆல்கஹால் அல்லாத பானங்களையும் கொண்டு வரலாம். Cafeயில் உணவையும் பானங்களையும் வாங்குபவர்கள் மட்டுமே Google Visitor Experienceஸின் உட்புற மற்றும் வெளிப்புற முற்றங்களில் உள்ள இருக்கைகளில் அமரலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

எனது வருகையை முன்கூட்டியே உறுதிசெய்ய வேண்டுமா?

இல்லை! வேலை நேரத்தின்போது எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பார்வையிடலாம். சில நிகழ்வுகளுக்குக் குறைவான இடமே இருக்கும், எனவே நிகழ்வில் கலந்துகொள்கிறீர்கள் என்றால் முன்கூட்டியே உங்கள் வருகையை உறுதிசெய்யுமாறு பரிந்துரைக்கிறோம்.

எனக்கு உணவு ஒவ்வாமை இருக்கிறது. நான் Cafeயில் சாப்பிட முடியுமா?

உணவு ஒவ்வாமைகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வோம், எங்கள் இடத்தில் உணவு உண்ணும்போது நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். முதன்மை மூலப் பொருட்கள் பற்றிய தகவல்களை வழங்க, உணவங்களின் மெனுக்களில் இருப்பதுபோல பெயர்களையும் விளக்கங்களையும் அமைத்துள்ளோம். மேலும் மூலப் பொருட்கள் பற்றி கூடுதல் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாராக உள்ளோம். நீங்கள் கேட்கும்பட்சத்தில் தயாரிப்பு லேபிளையும் நீங்கள் பார்ப்பதற்கு வழங்குவோம். உணவை முற்றிலும் எங்கள் சமையலறைகளிலேயே செய்கிறோம், மிகப் பொதுவாக ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களையும் நாங்கள் சமையலில் பயன்படுத்துகிறோம். எங்கள் மெனுக்களை அடிக்கடி மாற்றுகிறோம். மேலும் எங்களிடம் கூறாமலே தயாரிப்பு உருவாக்க முறையை உற்பத்தியாளர்கள் மாற்றக்கூடும். இந்தக் காரணங்களுக்காக, அன்றைய நாள் சமையலில் என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்பதைத் தெரிந்துகொள்வதற்கான சிறந்த நிகழ்நேரத் தகவல் வழங்குநர்கள் எங்கள் சமையல் நிபுணர்களும் மேலாளர்களும் ஆவர். ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்கள் குழு உறுப்பினரிடம் தெரியப்படுத்துங்கள், உங்களுக்கு உதவக்கூடிய மேலாளரிடம் அவர் அதைக் கூறுவார்.

Google Visitor Experience அனைவரும் அணுகும் வகையில் உள்ளதா?

ஆம்! மேற்கு நுழைவாயிலில் இருந்து Google Visitor Experience வரை சரிவேற்றம் உள்ளது, நுழைவுவாயில்கள் ADA சட்டத்திற்கு இணங்க அமைக்கப்பட்டுள்ளன.

செல்லப்பிராணிகளுக்கு அனுமதி உள்ளதா?

சேவை விலங்குகள் Cafe, Huddle ஆகிய பகுதிகளில் அனுமதிக்கப்படும். Google Store, வெளிப்புற Plaza ஆகிய பகுதிகளில் நாய்கள் அனுமதிக்கப்படும்.

இது Googleளின் வரலாறு மற்றும் பிராண்டைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கான வருகையாளர் மையமா?

உறவை ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட இடங்கள் மற்றும் நிகழ்வுகள் மூலம் சமூகம், வருகையாளர்கள் மற்றும் Googlerகளை ஒன்றிணைப்பதை Google Visitor Experience நோக்கமாகக் கொண்டுள்ளது. வழக்கமான வருகையாளர் மையம் இல்லை என்றாலும் தயாரிப்புகள், விற்பனைப் பொருட்கள் மற்றும் நிகழ்வுகள் மூலம் Googleளின் பிராண்டைத் தனிப்படுத்திக் காட்டும் Google Store மற்றும் பிற இடங்களை வருகையாளர்கள் பயன்படுத்தி மகிழலாம்.

Google Visitor Experienceஸில் வழிகாட்டியுடன் கூடிய சுற்றுப்பயண வசதி உள்ளதா?

Google Visitor Experienceஸில் வழிகாட்டியுடன் கூடிய சுற்றுப்பயணத்தை நாங்கள் வழங்குவதில்லை என்றாலும்கூட எங்கள் வேலை நேரத்தின்போது எப்போது வேண்டுமானாலும் பொது வசதிகளை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த சுய சுற்றுப்பயணத்திற்கான துண்டுப் பிரசுரங்களைப் படியுங்கள்.

Google Visitor Experienceரில் வைஃபை உள்ளதா?

ஆம்! Huddle, Cafe, Google Store ஆகிய பகுதிகளில் பொது வைஃபை உண்டு.

வாகன நிறுத்துமிடம் எங்கே உள்ளது?

Shoreline Amphitheatre Parking Lot C, Alta Garage ஆகிய இடங்களில் இலவச வாகன நிறுத்துமிடம் உண்டு. வாகன நிறுத்துமிடங்கள் பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள மேலே உள்ள 'இங்கே வருவதற்கான வழிகள்' பிரிவுக்குச் செல்லுங்கள்.

Huddleலில் நிகழ்வை முன்பதிவு செய்வது எப்படி?

நீங்கள் உள்ளூர் சமூகக் குழு அல்லது லாப நோக்கமற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்றால் Huddle நிகழ்வுப் பகுதியை முன்பதிவு செய்யத் தகுதிபெறக்கூடும். கூடுதல் தகவல்களுக்கு Huddle முன்பதிவுப் பக்கத்தைப் பாருங்கள்.

எனது கேள்விக்கான பதில் இங்கே இல்லை. நான் யாரைத் தொடர்புகொள்ள வேண்டும்?

visit@google.com என்ற முகவரியில் எங்களை நேரடியாகத் தொடர்புகொள்ளுங்கள்

ஏதேனும் கேள்வி உள்ளதா?

என்ற முகவரியில் எங்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளுங்கள்