Huddle அரங்கை முன்பதிவு செய்ய விரும்புகிறீர்களா?

Huddle என்பது சமூக நிகழ்ச்சிகள், உரையாடல்கள் மற்றும் கற்றலுக்கான ஒரு பிளாட்ஃபார்மாகும். இதன்மூலம் உள்ளூர் லாப நோக்கமற்ற நிறுவனங்களும் சமூகக் குழுக்களும் சமூக நிகழ்வு அரங்கை முன்பதிவு செய்துகொள்ளலாம் (ஆனால் தனிப்பட்ட சமூக நிகழ்வுகளுக்கு முன்பதிவு செய்ய முடியாது).

Huddle நிகழ்வு அரங்கில் 80 நபர்கள் வரை பங்கேற்கலாம். விளக்கக்காட்சி, பயிலரங்கு, அரங்க வடிவிலான இருக்கை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு உள்ளமைவுகளில் இதை அமைக்கலாம்.

விருப்பத்திற்கேற்ற லே-அவுட் ஸ்டைல்கள்

Huddle booking requirements

விரிகுடா பகுதியைச் சேர்ந்த குழுக்கள்/நிறுவனங்கள்

உள்ளூர் சமூகக் குழுக்கள்

லாப நோக்கமற்ற நிறுவனங்கள்

வணிகரீதியான நிகழ்வுகள் அனுமதிக்கப்படாது

தனிப்பட்ட நிகழ்வுகள் அனுமதிக்கப்படாது

சூழலுக்குப் பாதுகாப்பான, சமூகரீதியான, கல்விரீதியான, கலாச்சார ரீதியான, அறிவுசார் அல்லது தொண்டுணர்வுச் செயல்பாடுகளில் (மீட்டிங்குகள், பயிலரங்குகள், நிகழ்வுகள் போன்றவை) ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களும் மேலே குறிப்பிடப்பட்டுள்ளவையும் Huddle அரங்கை முன்பதிவு செய்வதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.

Booking request form

முன்பதிவு குறித்த பொதுவான கேள்விகள்

அரங்கை எப்படி முன்பதிவு செய்வது?

உள்ளூர் லாப நோக்கமற்ற நிறுவனங்களும் சமூகக் குழுக்களும் விவரப் படிவத்தை நிரப்பலாம். அரங்கின் கிடைக்கும்நிலை தொடர்பாக எங்கள் குழுவினர் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.

எனது நிகழ்வை அடுத்த வாரம் நடத்த விரும்புகிறேன். அதற்கேற்ப உங்களால் ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா?

அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக நடப்பதை உறுதிசெய்யும் நோக்கில், அவற்றைத் திட்டமிடுவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்வதற்கும் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே எங்களிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கூடுதல் தனிச்சிறப்புடைய நிகழ்வுகளுக்குப் பொதுவாக 30 நாட்களுக்கு முன்பே திட்டமிட வேண்டியிருக்கும். விவரப் படிவத்தை நீங்கள் சமர்ப்பித்ததும், நிகழ்வுக்கான தேவைகளின் அடிப்படையில் Huddle குழுவினர் அரங்கின் கிடைக்கும்நிலை குறித்து உங்களுக்குத் தெரிவிப்பார்கள்.

கேட்டரிங் வசதி உள்ளதா?

Yes, catering is available for a paid fee. Alcohol is not permitted at the Huddle. If you’d like to enjoy a bite before or after your event, the Cafe @ Mountain View is located next door to the Huddle and offers a group menu. Submit an inquiry form, and we can help determine the best plan for your attendees.

அரங்கில் என்னென்ன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன?

பின்வருபவை உட்பட, உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பமும் கருவிகளும் Huddle அரங்கில் உள்ளன: • பிரதான விளக்கக்காட்சிக்கான 98” புரொஜெக்டர் திரை • ஸ்பீக்கர்கள் • சப்வூஃபர் • மைக்ரோஃபோன்கள் • உள்ளமைக்கத்தக்க டிராக் லைட்டிங் • HDMI அடாப்டர் • வெண்பலகைகள் • உதவிகரமான கேட்கும்திறன் சாதனங்கள்

எனது நிறுவனம் தொடர் நிகழ்வுகளுக்கு முன்பதிவு செய்யலாமா?

அரங்கின் கிடைக்கும்நிலையைப் பொறுத்து, தொடர் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படலாம். விவரப் படிவத்தைச் சமர்ப்பியுங்கள், எங்கள் குழுவினர் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.

Huddle அரங்கை முன்பதிவு செய்ய ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா?

Huddle அரங்கைப் பயன்படுத்துவதற்கு வாடகைக் கட்டணம் எதுவுமில்லை. நிகழ்வின் பிற சேவைகளுக்கான கட்டணங்கள் அந்தந்தச் சேவைப் பயன்பாட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

எனக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் யாரிடம் கேட்கலாம்?

huddlebooking@google.com எனும் மின்னஞ்சல் முகவரியில் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.

இந்த விவரப் படிவத்தை நிறைவுசெய்யுங்கள், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்

Huddle அரங்கில் ஒரு நிகழ்வுக்கு முன்பதிவு செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால், கீழுள்ள புலங்களை நிரப்புங்கள்.

நீங்கள் லாப நோக்கமற்ற நிறுவனம் அல்லது சமூகக் குழுவைச் சேர்ந்தவரா?

நிகழ்வின் தேதியையும் நேரத்தையும் மாற்ற வேண்டியிருந்தால், அதற்குச் சம்மதமா?

நிகழ்வின் விவரங்கள்

உங்கள் குழுவைப் பற்றியும் நீங்கள் நடத்த விரும்பும் நிகழ்வைப் பற்றியும் சுருக்க விவரத்தை வழங்குங்கள். உங்கள் நிகழ்வின் நோக்கம் என்ன?

நிதித்திரட்டல், மது, கண்கவர் தீச்சுவாலைகள், தீச்சுடர்கள், விளையாட்டு, சமையல், சட்டவிரோதமான மருந்துகள், ஆயுதங்கள், விலங்குகள், புகைப்பிடித்தல்/பிரத்தியேகக் கருவிகள் மூலம் புகைத்தல், ஆதரவு திரட்டல் ஆகிய செயல்கள் உங்கள் நிகழ்வில் இருக்காது என்றால், "ஆம்" என்ற பதில் மூலம் உறுதிசெய்யுங்கள்.

நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் 18 வயதுக்கு மேற்பட்டவரா?

இது தொடர் நிகழ்வா?

விவரங்களைச் சமர்ப்பித்ததற்கு நன்றி

விரைவில் உங்களைத் தொடர்புகொள்வோம்.

அச்சச்சோ, ஏதோ தவறாகிவிட்டது

பிறகு மீண்டும் முயலவும்.